SHAKTHI......

SHAKTHI......
நினைவுகள்

Wednesday, March 17, 2010

எனக்கு பிடித்த ஜென் கவிதை

என்றோ படித்த இந்த கவிதை இன்னும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


நான் ஒரு எறும்பை கொன்றேன்
என் 3 குழந்தைகள்
அதை அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்கள் .

Thursday, March 11, 2010

எழுத்தாளனின் பேனா

நனைவதெற்கு யாரும்
இல்லையென
நிற்பதில்லை மழை

Tax structure in India

1) Qus. : What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!

2) Qus. : What are you doing in Business?
Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!

3) Qus. : From where are you getting Goods?
Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!

4) Qus. : What are you getting in Selling Goods?
Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!

5) Qus. : How do you distribute profit ?
Ans : By way of dividend
Tax : Pay dividend distribution Tax

6) Qus. : Where you Manufacturing the Goods?
Ans. : Factory.
Tax : PAY EXCISE DUTY!

7) Qus. : Do you have Office / Warehouse/ Factory?
Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!

8) Qus. : Do you have Staff?
Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!

9) Qus. : Doing business in Millions?
Ans. : Yes
Tax : PAY TURNOVER TAX!
Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax

10) Qus. : Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!

11) Qus.: Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!

12) Qus.: Are you going Out of Station for Business?
Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!

13) Qus.: Have you taken or given any Service/s?
Ans. : Yes
Tax : PAY SERVICE TAX!

14) Qus.: How come you got such a Big Amount?
Ans. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!

15) Qus.: Do you have any Wealth?
Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!

16) Qus.: To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!

17) Qus.: Have you purchased House?
Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !

18) Qus.: How you Travel?
Ans. : Bus
Tax : PAY SURCHARGE!

19) Qus.: Any Additional Tax?
Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!

20) Qus.: Delayed any time Paying Any Tax?
Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!

21) INDIAN :: can i die now??
Ans :: wait we are about to launch the funeral tax!!!

இந்த வாரப் புத்தகம்

ரொம்ப நாளாச்சுங்க ஒரு புத்தகத்தை படிக்க எடுத்து முடுசிட்டு தன கீழே வைக்கிறது.
ரொம்ப நாளா படிக்கணும்னு நினைச்சிட்டே இருந்தது. இப்ப தன கிடைச்சது நேரமும் புத்தகமும் ஒரு சேர.   கதையின் நாயகன் பல படங்கள்ல வர மாதிரி நகரத்தில் இருந்து சின்ன கிராமத்திற்கு போறார். அதுக்கப்புறம் முழுக்கதையும் அந்த கிராமத்துள் தான்.
படிக்கும் பொது உங்களையும் கிராமத்திற்கு அழைத்துச்செல்லும் உணர்வு ஏற்பட்டால் அது கதாசிரியிரின் வெற்றி.  கொலையைக்கூட அழகாக சொல்லும் திறமை சுஜாதாவுக்கு மட்டும் தான். முற்பாதி முழுவதும் நிதானமாய் ரசிக்கலாம் கிராமத்தை (வாழலாம்).
அவ்வளவு அழகாக்கியிருக்கிறார். கதையின் மறுபாதி சஸ்பென்ஸ் , த்ரில் வகை. எழுத்தில் உயிர் இல்லை . இரண்டாவது பாதிக்கு சுஜாதாவின் பேனா தேவையில்லை. 
இந்த வார புத்தகம்
சுஜாதாவின் "கரையெல்லாம் செண்பகப்பூ"

Wednesday, March 10, 2010

கொங்கு வட்டாரச் சொற்களின் அழகு

போன வாரம் மலையேற்றத்திற்கு (Trekking) நண்பர்களுடன் பொள்ளாச்சி கிட்ட இருக்க டப் ஸ்லிப் போனேன். சேத்துமடைநு ஒரு ஊர்ல தங்கி இருந்தப்ப எங்கும் சங்கீதம் போல இனிமையான கொங்கு மொழி. அவ்வளவு மரியாதையை வேற எந்த மாவடதிளையும் பார்க்க முடியாது. நண்பர்களின் பல மணி நேர கிண்டல் கேலிக்குப் பின்னும் இன்னும் காதில் ரீங்கரமிட்டுக் கொண்டிரிக்கிறது . வேலைக்காக கோவையை விட்டு பிரிந்து சென்னை தங்கி விட்ட போதிலும் துளியும் குறையவில்லை நம் மண்ணின் பாசம்.
சமீபத்தில் நான் ரசித்த வலைப்பதிவு.


கொங்கு நாட்டு வட்டார வழக்கின் சொற்களை அழகாய் கூறியிருக்கிறார் முகம் தெரியாத பங்காளி. ரொம்ப நன்றிங்க்னா .....
கொங்கு வட்டாரச் சொற்கள்
http://konguvaasal.blogspot.com/2007/07/blog-post_25.html

Monday, March 8, 2010

கொங்கு நாடு - 1

கொங்கு நாட்டை பத்தி  எங்கள் எல்லோருக்கும் ரொம்ப பெருமை . கொங்குச்சிங்கங்கள் என்று மார் தட்டி கொள்வோம் அடிக்கடி. கோவையில் ஒருமுறை தங்கியவர்கள் என்றுமே அதை சுகமாக நினைப்பார்கள். இதையெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன்??
யாழினிது குழலினிது என்பர் கொங்கு மொழி கேளாதோர் . சங்கீதம் போல் இனிமையாக  கொஞ்சும் மொழி எமது. மரியாதைக்கு பெயர் போனது எமது கொங்கு மண்டலம். யாரேனும் திட்டினால் கூட அது மரியாதையாகத்  தான் இருக்கும் . சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் ஒரு பதிவு அழகிய கொங்கு தமிழில் இருந்தது . மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இதோ கீழே....
http://varungalamuthalvar.blogspot.com/2008/12/blog-post_04.ஹ்த்ம்ல்
கோவையைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் கூறியது


கோயம்புத்தூர் - கவிஞர்  கண்ணதாசன்


கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!


வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!


நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.

Thursday, March 4, 2010

எப்போதும்

எப்போதும் வேகமாய் போகின்றன
பக்கத்துக்கு தண்டவாள
டிரெயின்கள் மட்டும்.

Monday, March 1, 2010

My name is khan

சினிமா விமர்சனம் என்று ஏதும் செய்ய கூடாது என்று தான் உறுதியாக இருந்தேன். அதற்கு நிறைய நண்பர்கள் வெறியுடன் இருக்கிறார்கள். இறுப்பினும் நேற்று பார்த்த படம் என்னை எழுத தூண்டியது. கடைசியாக நானும் பார்த்து விட்டேன் நிர்பந்தத்தின் பேரில் ." My Name is Khan".
சமீபத்திய பரபரப்பு படம். எத்தனை எதிர்ப்புகள் எத்தனை விளம்பரங்கள். அடடா....
நல்ல வேளை படம் பற்றி ஏற்கனவே சிறிது தெரிந்திருந்ததால் வெறுப்பின் உச்சத்துக்கு போகவில்லை. இந்த மிக சாதாரண படத்திற்கு இத்தனை விளம்பரம் தேவையில்லை .
முஸ்லிம் என்ற காரணத்தினால் அவமானப்படுகிறார் கான் என்பது தான் கதையின் மையக்கரு.
சாதாரணமாக தன்னை சொல்பதவை விட " ஆட்டிசம் " குறைபாடுள்ள நபராக நடிப்பதன் மூலம் அனுதாபத்தை சம்பாதிக்கிறார் கான். மிகக் சிறந்த வியாபார யுத்தி .  மக்களும் பார்த்து விட்டு வருத்தபப்டுவார்கள்....

இவர் செய்யும் வேலைகளினால் மொத்த அமெரிக்காவே இவரை புகழ்வது, ஒபாமா பேசுவது எல்லாம் விஜயகாந்தின் "நரசிம்மா"  படத்தை விட பிரமாதம்.

ஊருக்கே இவர் உதவுவதும் அதை பார்த்து மக்கள் மாறுவதும் "தயிர்ல போட்டா தயிர்வடை, ஓட்டை போட்டா ஓட்டவடை " மாதிரி ஹீரோயிச தத்துவம்....

படத்தின் ஆரம்பத்தில் ஏதோ ஹிந்து ஊர்வலம் போகிறதாம் அதன் சத்தங்களும் கூச்சல்களும் இவரை பாதிப்புக்கு உள்ளாக்கிகரதாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவிலும் காசு பார்க்க முயன்றிரிக்கிறார்.யார் மனம் புண்பட்டாலும்.
மசூதியில் இந்து மத எதிர்ப்பு போதனைகளை அமைதியாக காடியிருக்கிரர்கள். ஆனா உண்மையில் நாட்டில் உள்ள பல லட்சம் மசூதிகளில் இது தினமும் நடந்து கொண்டு தன இருக்கிறது,.  எத்தனை கான்கள் அதை எதிர்க்கிறார்கள் அல்லது வெளியே சொல்கிறார்கள்.????
உதாரணம் : இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி .
அன்புள்ள ஷாருக் , முஸ்லிம் நபர்களுக்கு ஒரு தீங்கு என்றவுடன் ஓடி வந்து படம் எடுத்தீர்கள். உங்கள் தனிப்பட்ட ஏர்போர்ட் அனுபவத்தையும் அதில் சேர்த்தீர்கள்.
ஆண்டுக்கு பல லட்சம் இந்தியர்கள் தீவிரவாத தாக்குதல்களால் செத்து வீழ்கிறார்கள்.
எங்கே போய் விட்டீர்கள் நண்பரே.... அவர்களுக்கு ஜாதியும் மதம் கிடையாது... உயிர்கள் மட்டும் தான் நண்பரே....
எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் என்ற கொடூர ஜோக் கேட்டதுண்டா??
எந்த ஒரு முஸ்லிம் தீவிரவாதி (மன்னிக்கவும்) தீவிரவாதி தவறு செய்யும் போது நீங்கள் அல்லது உங்கள் மதத்தினர் ஏன் முன் வந்து எதிர்ப்பதில்லை.?? நீங்கள் அப்படி வந்து நாட்டுக்காக போராடியிருந்தால் எப்படி முளைத்திருக்கும்  சேனாக்களும் சங்கங்களும் .....???
மதத்தின் பெயரால் தயவு செய்து தீவிரவாதிகளை அடைகாக்கதீர்கள்.
தவறு யாரிடம்..?? உங்கள் மசூதியில் ஒருவன் நாட்டுக்கு எதிராக பேசும் பொது விழும் முதல் அரை உங்களுடையதாக இருக்கட்டும். பிறகு நீங்கள் பேசலாம் உங்கள் உரிமைகளை பற்றியும் சேனாக்களைப் பற்றியும்...
(பணப்) பசிக்காக சொந்த சகோதரனின் சதை அறுத்து தின்னும் வேலைஇந்த படம் .
இது : முஸ்லிம்களுக்கான படம் இந்தியர்களுக்கு அல்ல.