திதி நாளன்று
அம்மாவுக்கு...
'மற்ற நாட்களில்
பசிக்காதா பாட்டிக்கு?'
என்கிறாள்
என் தேவதைக் குழந்தை!
-ராகவேந்திரன்
SHAKTHI......
Friday, December 10, 2010
தேவதைகள்
தேவதைகள் நடந்து
கொள்வதில்லையெனினும்
தேவதைகளில்லையென்று
ஒப்புக் கொள்ளவும்
சங்கடமாயிருக்கிறது.
தினமொரு கடிதம்
நிமிடத்திற்கொரு எஸ்.எம்.எஸ்.
சற்று நேரத்திற்கொருமுறை
தொலைபேசியில் சிணுங்கலென்று
நம் கோரிக்கைகளை
தேவதைகள் பரிசீலிக்காவிடினும்
அவர்கள் தேவதைகளே!
பாவாடை தாவணி
ரெட்டை ஜடை
ஒற்றை ரோஜா
தேவதைகல் குறித்த கணிப்பு
தவறிப் போனாலும்
சுடிதார், பாப்கட்டிங், அவசரநடை
ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம்
தேவதைகளென.
அவரவர் வீட்டில்
அம்மாக்களாகவும் அக்காக்களாகவும்
தங்கைகளாகவும்
தேவதைகள் இருப்பதை
ஏற்றுக்கொள்வதில்லையெனினும்
அவர்கள்
அச்சொல்லொன்றிற்காக
எதிர்பார்த்திருக்கிறார்கள் என்றைக்கும்!
-அம்ச ப்ரியா (என் நண்பனின் முகம் தெரியா ஒரு தேவதை )
Subscribe to:
Posts (Atom)